ADDED : நவ 23, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டில், மூன்று நாட்களுக்கு முன் கிலோ,
30 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று, 50 ரூபாயை கடந்து 60 ரூபாய் வரை
விற்றது.
வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என்று, வியாபாரிகள்
தெரிவித்தனர். வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கவே
வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சின்ன
வெங்காயம் கிலோ, 180 ரூபாயாக நேற்று உயர்ந்தது. போதிய மழையின்மை,
விளைச்சல் பாதிப்பால் ஈரோட்டுக்கு தினமும், 5 முதல் 6 டன் வெங்காயம்
மட்டுமே வருகிறது. கடந்த, 20 நாட்களில், 60 ரூபாயில் இருந்து 140
ரூபாயாக உயர்ந்த நிலையில், 180 ரூபாயை சின்ன வெங்காயம் நேற்று
தொட்டதாக, வியாபாரிகள் கூறினர்.
