ADDED : நவ 09, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே வானம்
மேகமூட்டமாக இருந்தது. காலை, 11:00 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்தது.
இடைவெளி விட்டு, 12:00 மணியளவில் மீண்டும் மழை பரவலாக பெய்தது.
மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய சாரல் மழை துாறி கொண்டே இருந்தது. தொடர்
சாரல் மழையால், மக்கள் அவதிக்குஆளாகினர்.
* ஈரோடு மாநகரில்
நேற்று காலை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது.
காலை, 11:35 மணிக்கு துாறலாக மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்களில்
வேகமெடுத்து, 15 நிமிடம் கொட்டி தீர்த்தது. இதனால் திறந்தவெளியில்
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சிறுவர்கள் சிறிது நேரம் முடங்க
நேரிட்டது. மழை நின்றவுடன் தங்கள் கொண்டாட்டத்தை மீண்டும்
தொடங்கினர்.
