/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கூட்டம் தெருவோர கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
/
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கூட்டம் தெருவோர கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கூட்டம் தெருவோர கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கூட்டம் தெருவோர கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
ADDED : டிச 05, 2024 08:01 AM
ஈரோடு: தெருவோர கடைகளால் தொல்லை, அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சியை கண்டித்து கனி மார்க்கெட் வியாபாரிகள் சிறிது நேரம் கடையடைத்து, கூட்டம் நடத்தி வரும், 9 முதல் உள்ளிருப்பு போராட்டம்
நடத்துவதாக அறிவித்துள்ளனர்.ஈரோடு பி.எஸ்.பார்க் அருகே உள்ள, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி நான்கு
தளங்-களில், 400 கடைகள் உள்ளன. 240 கடைகள் செயல்படுகின்றன. பல லட்சம் ரூபாய் டிபாசிட்,
ஆயிரக்கணக்கான ரூபாய் வாட-கையில் கடைகள் இயங்கினாலும், அடிப்படை வசதிகளை கூட மாநகராட்சி
செய்து கொடுக்கவில்லை. அத்துடன், வளாகத்துக்கு வெளியே தெருவோர கடைகளை அனுமதிப்பதால், கனி
மார்க்கெட் கடைகளின் வியாபாரம் பாதிக்கிறது.இந்நிலையில், நேற்று காலை கடைகளை அடைத்து, கனி மார்க்கெட் வியாபாரிகள் மூர்த்தி, நுார்சேட், செல்வராஜ்
ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடத்தி, நிருபர்களிடம் கூறிய-தாவது: தெருவோர கடைகள், பிளாட்பார்ம்
கடைகளால் எங்கள் வணிக வளாகத்துக்குள் உள்ள கடைகளுக்கு மக்கள் வர தயங்கு-கின்றனர். விற்பனை
பாதிப்பதால், அவற்றை அகற்ற வேண்டும். பிரப் சாலை நுழைவு வாயில் வழியாக வாகனங்கள், மக்கள் வந்து செல்ல
அனுமதிக்க வேண்டும். கனி மார்க்கெட்டுக்குள், மூன்று வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும். வளாகத்தை
சுற்றி உயர்கோபுர மின் விளக்கு, வளாகத்தின் நடுவே இருக்-கைகள், வழித்தடத்தில் ஷட்டர்கள், பஸ் ஸ்டாப்
அமைக்க வேண்டும். துாய்மையாக பாத்ரூமை பராமரிக்க வேண்டும். மழை நீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.
டூவீலர்களுக்கு கட்டணம் வசூ-லிக்கக்கூடாது. வளாக எல்.இ.டி., டிஜிட்டல் ஸ்கிரீனில், கனி மார்க்கெட்
விளம்பரங்கள் மட்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும். 36 மாத டிபாசிட் என்பதை, 12 மாதமாக குறைக்க வேண்டும்.
இவற்றை நிறைவேற்ற தவறினால் வரும், 9 முதல் கனி மார்க்கெட் வளாக கடைகளை அடைத்து, உள்ளிருப்பு
போராட்-டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.இதையடுத்து வியாபாரிகள் கோரிக்கை மனுக்-களை, மாநகராட்சி கமிஷனர் மணீஷ், மேயர்
நாகரத்தினம் ஆகி-யோரிடம் வழங்கினர்.