/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொடச்சூர் வாரச்சந்தையில் களை கட்டிய பருப்பு வியாபாரம்
/
மொடச்சூர் வாரச்சந்தையில் களை கட்டிய பருப்பு வியாபாரம்
மொடச்சூர் வாரச்சந்தையில் களை கட்டிய பருப்பு வியாபாரம்
மொடச்சூர் வாரச்சந்தையில் களை கட்டிய பருப்பு வியாபாரம்
ADDED : மார் 03, 2024 01:40 AM
கோபி:மொடச்சூர் வாரச்சந்தையில், பருப்பு, பயிர் ரகங்களின் விற்பனை நேற்று களைகட்டியது.
கோபி அருகே மொடச்சூரில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வாரச்சந்தை கூடியது. வழக்கமாக மாசி மாதம் துவங்கினால் பருப்பு, பயிர் ரகங்களின், மொத்த கொள்முதல் விற்பனை அங்கு களைகட்டும். முதல் வாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இல்லை. இந்நிலையில்,
மூன்றாவது வாரமான நேற்று விற்பனை களைகட்டியது.திருப்பூர், குன்னத்துார், கெட்டிச்செவியூர், திங்களூர், சிறுவலுார் பகுதி மக்கள் வாரச்சந்தையில் குவிந்தனர்.
துவரம் பருப்பு கிலோ, 140 ரூபாய், குண்டு உளுந்து, 120, பாசிப்பயிர், 130, பாசிப்பருப்பு, 140, கொள்ளு, 80, சீரகம், 400, மல்லி, 100, வெந்தயம், 110, தட்டைப்பயிர், 120, அவரைப்பருப்பு, 200, புளி, 100 முதல், 150 ரூபாய், வரமிளகாய், 220, கருப்பு சுண்டல், 80, வெள்ளை சுண்டல், 120 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 40 டன் பருப்பு, பயிர் ரகங்கள், 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, வியாபாரிகள்
தெரிவித்தனர்.

