/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரும்பு தடுப்பில் சிக்கிய லாரியால் வாகன நெரிசல்
/
இரும்பு தடுப்பில் சிக்கிய லாரியால் வாகன நெரிசல்
ADDED : நவ 27, 2025 02:14 AM
ஈரோடு, வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலம் முன்புறம் உள்ள தடுப்பு கம்பியில் சரக்கு லாரி சிக்கியதால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு வெண்டி
பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், அதிக உயரத்தில் சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், பாலத்தின் இரு
புறமும் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வெண்டிபாளையத்தில் இருந்து, நேற்று ஜவுளி பாரம் ஏற்றி சென்ற லாரி, கரூருக்கு ரயில்வே நுழைவு பாலத்தின் வழியே சென்றது. முதலில் எளிதாக சென்ற லாரி, சிறிது துாரத்தில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் சிக்கி கொண்டது.
லாரியில் அதிக உயரமாக பாரம் ஏற்றி இருந்ததே இதற்கு காரணம். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின், லாரியில் இருந்த பாரம் குறைக்கப்பட்டு, உயரம் குறைந்ததால் லாரி
இலகுவாக சென்றது.

