/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரான்ஸ்பார்மர் மீது மோதி தீயில் கருகிய வாகனம் விபத்தை தவிர்க்க பிரேக் போட்டதில் விபரீதம்

ADDED : ஜூலை 30, 2025 01:25 AM
வெள்ளகோவில், திருப்பூரில் தனியார் பிஸ்கட் கம்பெனிக்கு செல்ல, பட்டுக்கோட்டையில் இருந்து தோஸ்த் வாகனம் சென்றது. ஈரோடு, கருப்பணக்கோவில் வீதி இன்சாப்தீன், 63, ஓட்டி வந்தார். கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலை, வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசு பிரிவு பகுதியில், நேற்று மதியம், 2:30 மணியளவில் வாகனம் சென்றது. அப்போது குறுக்கே புகுந்துவிட்ட டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க, டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனாலும் வாகனம் எரிந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உடனடியாக இறங்கி விட்டதால் சிறுகாயமும் இன்றி தப்பினார்.அதேசமயம் டிரான்ஸ்பார்மர் மீது மோதியவுடன் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.