/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம் கடம்பூரில் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம் கடம்பூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம் கடம்பூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம் கடம்பூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 19, 2025 02:21 AM
சத்தியமங்கலம்:கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன், பலத்த மழை பெய்தது. கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருந்த ஒரு யூக்லிப்டஸ் மரம், நேற்று முன்தினம் இரவு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் ஒர்க்சாப்பில் நிறுத்தப்பட்டிருந்த, 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமாகின. இரு மின் கம்பங்களும் முறிந்து சேதமானது.
அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனால் அவ்வழியாக கனரக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், கார், லாரி போன்ற வாகனங்கள், 10 கி.மீ., துாரம் சுற்றி பெலுமுகை வழியாக சென்றன. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நேற்று காலை மரத்தை வெட்டி அகற்றிய பிறகு, 8:00 மணிக்கு பிறகு போக்குவரத்து துவங்கியது.இன்னும் மரங்கள் பாக்கி
கடம்பூர் கடைவீதியில் சாலையோரம் பழமையான, 28 யூக்லிப்டஸ் மரங்கள் இன்னும் உள்ளன. இந்த மரத்தின் கீழ், 10க்கும் மேற்பட்ட கடைகள், 30 வீடுகள் உள்ளன. காற்றுடன் மழை பெய்யும்போது கிளைகள் முறிந்து வீடுகளின் மேல் விழுகிறது. மரத்துக்கு கீழ் உயரழுத்த மின் கம்பியும் செல்கிறது. சில சமயங்களில் மின் கம்பிகள் மீதும் கிளை விழுந்துள்ளன. இந்த மரங்களை வெட்டி அகற்ற பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.