ADDED : ஜூன் 26, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், மொபைல் போனை பறித்து சென்ற, 'ஏ' பிரிவு பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, பழைய பூந்துறை சாலை ஓடை பள்ளத்தை சேர்ந்தவர் கவுதம், 28. கடந்த, 24ல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, கருங்கல்பாளையம் மோசி கீரனார் வீதியை சேர்ந்த இப்ராகிம், 32, என்பவர் கவுதமின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 7,000 ரூபாய் மதிப்புள்ள ரெட்மீ மொபைல் போனை பறித்து கொண்டு தப்பினார். ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, இப்ராகிமை கைது செய்தனர். இப்ராகிம் மீது பல்வேறு ஸ்டேஷன்களில், 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் போலீஸ் பட்டியலில், 'ஏ' பிரிவு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.