/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோரம் தேங்கும் கழிவு நீரால் அவதி
/
சாலையோரம் தேங்கும் கழிவு நீரால் அவதி
ADDED : ஜூன் 12, 2025 01:43 AM
ஈரோடு, ஈரோட்டில், சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஈரோடு மாநகராட்சி, முதல் மண்டலம் நான்காவது வார்டு கொங்கம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. மாநகராட்சி லாரி மூலம் கழிவுநீரை உறிஞ்சி எடுத்தாலும், சில நிமிடங்களில் மீண்டும் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை காலத்தில் மழை நீருடன் சாக்கடை நீரும் சங்கமிக்கிறது. இதனால் டூவீலர்கள், நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.
கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் கேள்விக்
குறியாகி உள்ளது. நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.