/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது
/
தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது
ADDED : மார் 01, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,:சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து, மூன்று நாட்களாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடந்தது.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட போவதாக ஆசிரியர்கள் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி போராட்டம் நடத்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையில் கூடிய, 106 ஆசிரியைகள் உள்ளிட்ட, 145 பேரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

