தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டவிரோதமாக 170 டெட்டனேட்டர் வைத்திருந்த இருவருக்கு காப்பு

சட்டவிரோதமாக 170 டெட்டனேட்டர் வைத்திருந்த இருவருக்கு காப்பு

சட்டவிரோதமாக 170 டெட்டனேட்டர் வைத்திருந்த இருவருக்கு காப்பு


ADDED : ஜூலை 30, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே, சட்டத்திற்கு புறம்பாக, 170 டெட்ட

னேட்டர் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். விற்-பனை செய்த த.வெ.க., நிர்வாகி தலைமறைவாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள முத்துார் செங்கோடம்பாளையத்தை சேர்ந்-தவர் குப்புசாமி, 55. இவரது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடக்கிறது. அதே பகுதியை சேர்ந்த செந்தில், 22, என்பவர், குப்புசாமி தோட்டத்தில் கிணறு வெட்ட டெட்டனேட்டர் பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக பாப்பினி நாட்டார்பாளையம் பகு-தியை சேர்ந்த, த.வெ.க., நிர்வாகி சோமசுந்தரத்துக்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலையில் இருந்து செந்தில், 170 டெட்ட-னேட்டர்களை வாங்கி வந்து, குப்புசாமி வீட்டில் வைத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தி, 170 டெட்ட-னேட்டர்களை சட்ட விரோதமாக வாங்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குப்புசாமி, செந்தில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள த.வெ.க., நிர்-வாகி சோமசுந்தரத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us