/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர்-மொபட் மோதலில் ஒரே நிறுவனத்தின் 2 ஊழியர் பரிதாப பலி
/
டூவீலர்-மொபட் மோதலில் ஒரே நிறுவனத்தின் 2 ஊழியர் பரிதாப பலி
டூவீலர்-மொபட் மோதலில் ஒரே நிறுவனத்தின் 2 ஊழியர் பரிதாப பலி
டூவீலர்-மொபட் மோதலில் ஒரே நிறுவனத்தின் 2 ஊழியர் பரிதாப பலி
ADDED : ஆக 26, 2025 01:54 AM
புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 61; கோவை மாவட்டம் பொங்கலுார் தனியார் நிறுவன செக்யூரிட்டி. வேலை முடிந்து புளியம்பட்டியில் உள்ள வீட்டுக்கு யூனிகான் பைக்கில் நேற்றிரவு திரும்பினார்.
டானாபுதுார் பெட்ரோல் பங்க் அருகே, 9:30 மணிக்கு வந்தபோது, எதிரே அதே நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்த கோபியை சேர்ந்த கார்த்திகேயன், 21, டியோ ஸ்கூட்டரில், சக மெஷின் ஆப்பரேட்டர் பிரவீன், 20, என்பவருடன் வந்தார். எதிர்பாராதவிதமாக பைக்கும், மொபட்டும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் மூன்று பேரும் துாக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்தனர். இதில் பழனிச்சாமி, கார்த்திகேயன் சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயமஅடைந்த பிரவீன் மீட்கப்பட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.