ADDED : அக் 22, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே, டூவீலரில் கர்நாடக மதுபானங்கள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் போலீசார், நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே டூவீலரில் வந்தவர்களை சோதனை செய்ததில், கோபி அருகே கோட்டு புள்ளாம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 28, குமரவேல், 36, எனவும் இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்பு இருவரையும் கைது செய்து, 18,460 ரூபாய் மதிப்புள்ள, 152 மது பாக்கெட், 7 மது பாட்டில் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
