/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டாசில் இருவர் சிறையில் அடைப்பு
/
குண்டாசில் இருவர் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 05, 2026 04:25 AM
ஈரோடு:ஈரோட்டில் இரு மாநிலங்களுக்கு இடையே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட, இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு, மாமரத்து பாளை யம், சக்தி தேவி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன், 36. தமிழ்நாடு எழுச்சி கழக நிறுவன தலைவர். இதன் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர், ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பழனியப்பா நகர் அப்துல் மாலிக்,19. இரு-வரும் சமூக வலைதளத்தில் தமிழக-கர்நாடகா மக்களிடையே பகைமையை உண்டாக்கும் விதமான கருத்துகளை பேசி வீடியோ பதிவிட்டது தொடர்பாக, கடந்த, 18ல் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இவர்கள் இருவரது முகநுால் பக்கத்தை போலீசார் ஆய்வு செய்-தனர். ஈரோடு வீரப்பன்சத்திம் சத்தி சாலையில், கர்நாடகா பதிவெண் கொண்ட டெம்போ டிராவலரை நிறுத்தி டிரைவரை தகாத வார்த்தை பேசியும், அடித்தும், கர்நாடகா கொடியை வேனில் இருந்து டிரைவரிடம் கூறி கழற்ற செய்து, அதை போட்டோ பிடித்து பதிவிட்டுள்ளது தெரியவந்தது. இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு
எஸ்.பி., சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். பரிசீலனை செய்த ஈரோடு கலெக்டர் கந்தசாமி, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இருவரும் நேற்று கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

