/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உரிமை கோராத தொகை நாளை முதல் முகாம்
/
உரிமை கோராத தொகை நாளை முதல் முகாம்
ADDED : அக் 14, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நீண்ட காலம் உரிமை கோராத வங்கி வைப்புத்தொகை, காப்பீடு தொகை, பங்குத்தொகையை உரிமையாளர் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
அனைத்து வங்கி, காப்பீடு, இதர துறை சார்ந்த அலுவலக கிளைகளில் வரும் டிச., 31 வரை நடக்க உள்ளது. வங்கி கணக்கு, நிலுவை வைப்பு தொகை, காப்பீடு தொகை, பங்குகள், பிற நிதி சொத்துக்களை பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உரிமையாளர் அல்லது சட்ட வாரிசுகளுக்கு மீட்பதற்கான உதவி செய்யப்படும்.
வங்கியில் தொடர்ந்து, 10 ஆண்டுக்கு மேல் செயல்படாத கணக்கு, பணம் கோரப்படாத வைப்புத்தொகை விபரத்தை, ரிசர்வ் வங்கியின் https://udgam.rbi.org.inல் அறியலாம்.