/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் தரலாம்
/
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் தரலாம்
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் தரலாம்
யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார் தரலாம்
ADDED : பிப் 13, 2024 12:26 PM
ஈரோடு: யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் முனிசிபல் காலனியில், யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனுார் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் என்ற நிறுவனமும், 2017ல் துவங்கப்பட்டது. இவற்றின் நிர்வாக இயக்குனராக ஈரோடு, இடையன்காட்டு வலசு, சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த நவீன்குமார், 38, செயல்பட்டார்.
கவர்ச்சிகர விளம்பரங்களை அறிவித்து, முன்னாள் ராணுவத்தினர், மக்கள்
உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பணத்தை முதலீடாக பெற்றனர். இரு தவணை மட்டும் வட்டி கொடுத்த நிலையில் தலைமறைவாகினர். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசில், 22 பேர் புகார் அளித்தனர். இதில், 30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது உறுதியானது. ஆனால், இரு நிறுவனத்திலும், 500க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் தராதவர்கள், ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில்
புகாரளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.