ADDED : டிச 31, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலை-மையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வி.ஏ.ஓ., அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர், இணைய வசதியுடன் நவீன மயமாக்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும். பதவி உயர்வை முறையாக வழங்கவில்லை. 10 ஆண்டுகள் பணி முடித்தோ-ருக்கு தேர்வு நிலை வி.ஏ.ஓ., என்றும், 20 ஆண்-டுகள் முடித்த வி.ஏ.ஓ.,க்களை சிறப்பு நிலை வி.ஏ.ஓ., என அரசாணை வெளியிட வேண்டும். பதவி உயர்வு கால வரம்பை மூன்றாண்டாக குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

