/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ADDED : அக் 20, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், அக்.20-
டி.என்.பாளையம் யூனியன் கொங்கர்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கொங்கர்பாளையம் ஊராட்சி தலைவர் ஜானகிராஜா வரவேற்றார். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி துவக்கி வைத்தனர்.
ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு, காய்ச்சல் உட்பட பல நோய்களுக்கு முதல் சிகிச்சை மற்றும் சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. டி.என்.பாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முதல் சிகிச்சை அளித்தனர்.