/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் விழா நிறைவு
/
வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் விழா நிறைவு
ADDED : ஜன 01, 2026 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு திருவிழா கடந்த, 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 25ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. 30ல், பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கபட்டது. மாலை 3:00 மணி முதல் பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான இன்று (ஜன., 1) காலை 7:00 மணிக்கு கம்பம் எடுத்தல், இரவு 8:00 மணிக்கு மறுபூஜை நடைபெறுகிறது.

