/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் நிறுத்தம்
/
வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் நிறுத்தம்
ADDED : ஜன 01, 2026 04:54 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து கள்ளிபாளையம் மதகில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.
கடந்த 1980ம் ஆண்டு வெள்ள கோவில் அருகே, 700 ஏக்கர் பரப்பளவில் 26 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில், 0.53 டி.எம்.சி., நீர் இருப்பு வைத்து பாசனத்துக்கு நீர் திறக்கும் வகையில், வட்டமலைக்கரை அணை கட்டப்பட்டது. இதன் மூலம் வெள்ள கோவில், தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம்,புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில், 6,050 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.பி.ஏ.பி., அணைகளில்
உபரியாக நீர் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 15 நாட்களுக்கு, 250 கன அடி வீதம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து நீர் திறக்க அரசாணையும் உள்ள நிலையில், 1996ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பி.ஏ.பி.,-யில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து வட்ட மலைக்கரை அணைக்கு நீர் திறக்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளிபாளையம் மதகில் இருந்து நீரை திறந்து விட்டனர். கள்ளிபாளையம் மதகில் இருந்து வினாடிக்கு, 240 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரானது நான்கு நாட்கள் கடந்து, 22ம் தேதி அணையை வந்தடைந்தது. நீர் மட்டம் அணையில் தொடந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

