/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு
/
வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு
ADDED : பிப் 12, 2024 11:56 AM
ஈரோடு: முகூர்த்த நாளில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை ஈரோடு மார்க்கெட்டில் அதிகரித்தது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆந்திராவில் இருந்து, காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் சராசரியாக, 1,350 டன் வரை வரத்தாகும். ஆனால் நேற்று, 900 டன்னாக குறைந்தது.
முகூர்த்த நாளில் வரத்து குறைந்ததால் கிலோவுக்கு, 10 ரூபாய் வரை விலை அதிகரித்தது. இதனால், ௫௦ ரூபாய்க்கு விற்ற கத்திரி, 60 ரூபாய்; ௮௦ ரூபாய்க்குவிற்ற கேரட், ௯௦ ரூபாய்க்கு விற்றது. அதேசமயம் முருங்கைகாய் கிலோவுக்கு, 20 ரூபாய் அதிகரித்து, 100 ரூபாயாக உயர்ந்தது.
மார்க்கெட்டில் பிற காய்கறிகள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): - வெண்டைக்காய்--60, பீர்க்கங்காய்-50, புடலங்காய்-30, கருப்பு அவரை-80, பட்ட அவரை-70, பச்சை மிளகாய்-70, முள்ளங்கி - 60, பீன்ஸ்-70, பீட்ரூட்-80, இஞ்சி-150, உருளைக்கிழங்கு-40, காலிபிளவர்-30, முட்டைகோஸ்-30, தக்காளி-30, சின்ன வெங்காயம்-30, பெரிய வெங்காயம்-30, பூசணிக்காய்-30. அதேசமயம் உடைத்த பூண்டு கிலோ, 360 ரூபாய், உடைக்காதது, 380 ரூபாய்-க்கும் விற்றது.