/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி
/
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 31, 2024 06:19 AM
ஈரோடு: ஈரோடு வட்டார வேளாண் துறையின், வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும், கூரப்பாளையம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிக-ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போதைய ரபி பருவத்துக்கான வேளாண் யோசனைகள், பயிற்சியை, ஈரோடு மற்றும் சென்னிமலை வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வழங்கினார். ஈரோடு வட்டார தோட்-டக்கலை உதவி இயக்குனர் பிரியா தலைமை வகித்தார். அங்கக ஆர்வலர் கருப்பசாமி, தோட்-டக்கலை பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல், அங்கக முறையில் கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கினார். வேளாண் அலுவலர் ராம்ஜிவன்யா, தோட்டக்கலை அலுவலர் சவிதா ஆகியோர் மானிய திட்டங்கள், வேளாண் முன்னேற்றக்கு-ழுவின் நோக்கம், ஒருங்கிணைந்தை பூச்சி, நோய் கட்டுப்பாடு முறைகளை விளக்கினர். ஈரோடு வட்டார செயற்பொறியாளர் சந்திரசேகரன், சூரிய மின் சக்தி மூலம் பம்பு செட் அமைத்தல், நுண்ணீர் பாசன மானியம் பற்றி விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கிருத்திகா, உதவி தோட்டக்கலை அலுவலர் புஷ்பலதா, கவிதா ஆகியோர் திட்டங்கள், செயலி செயல்பா-டுகள் பற்றி பயிற்சி வழங்கினர்.