/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் விஷ்ணுபதி புண்யகாலம்
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் விஷ்ணுபதி புண்யகாலம்
ADDED : நவ 17, 2024 01:50 AM
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில்
விஷ்ணுபதி புண்யகாலம்
ஈரோடு, நவ. 17-
விஷ்ணுபதி புண்யகாலமான நேற்று, ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பிரகாரத்தை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விஷ்ணுபதி புண்யகாலத்தில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டி விஷ்ணுவை, 27 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். தமிழ் மாதத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விஷ்ணுபதி கடைப்பிடிக்கப்படுகிறது.
கார்த்திகை மாத பிறப்பான நேற்று, விஷ்ணுபதி கடைப்பிடிக்கப்பட்டது. ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், காலை முதல் ஏராளமான பக்தர்கள் பிரகாரத்தை, 27 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.