/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு
/
நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு
ADDED : அக் 31, 2025 02:05 AM
ஈரோடு,  ஈரோட்டில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்த கூட்டம் நடந்தது.
அக்., 28 - நவ., 3 வரை படிவங்கள் அச்சடிப்பு, அதிகாரிகளுக்கு பயிற்சி, நவ., 4 - டிச., 4 வரை வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்குதல், டிச., 9 - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, டிச., 9 - ஜன., 8 வரை உரிமை கோரல், மறுப்புரை பெறும் காலம், டிச., 9 - ஜன., 31 வரை விசாரணை மற்றும் சரி பார்ப்பு, பிப்., 7ல் இறுதி வாக்காளர்
பட்டியல் வெளியீடு என திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், உரிய அடையாள அட்டை அணிந்து வீடுகளுக்கு வருவர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கணினியில் பதிவேற்றி, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வர். இப்பணியில் அனைத்து கட்சி ஓட்டுச்சாவடி முகவர்கள் இணைந்து செயல்படுவர்.
இப்பணியின்படி, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது உறுதியாகும். தகுதியற்ற வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என உறுதியாகும். இடம் மாறுதல், நகரமயம், புதிய இடத்தில் பதிவு செய்தல், பழைய இடத்தில் பெயர் நீக்காமையால் சில பெயர்கள் வேறு இடங்களிலும் இடம் பெற வாய்ப்பாகிறது.
இம்மாவட்டத்தில், 6,820 ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் பங்கேற்பதால், முரண்பாடுகள் ஆரம்பத்தில் களையப்படும். தேர்தல் ஆணைய விதிப்படியே, வாக்காளர் உறுதி செய்யப்படுவர்.
வாக்காளர்கள் https://erolls.tn.gov.in/electoralsearch/ என்ற இணைய தளம் மூலம், தங்கள் விபரத்தை  உள்ளீடு செய்து அறியலாம், என யோசனை தெரிவிக்கப்பட்டது.

