sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வட்டமலைகரை அணைக்கு வந்தது தண்ணீர் மலர் துாவி, பொங்கலிட்டு வரவேற்பு

/

வட்டமலைகரை அணைக்கு வந்தது தண்ணீர் மலர் துாவி, பொங்கலிட்டு வரவேற்பு

வட்டமலைகரை அணைக்கு வந்தது தண்ணீர் மலர் துாவி, பொங்கலிட்டு வரவேற்பு

வட்டமலைகரை அணைக்கு வந்தது தண்ணீர் மலர் துாவி, பொங்கலிட்டு வரவேற்பு


ADDED : ஜன 13, 2025 03:13 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 8ம் தேதி கள்ளிபா-ளையம் மதகில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நி-லையில், 82 மணி நேரத்துக்குப் பிறகு, வட்டமலைக் கரை அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வந்தது. வட்டமலை ஓடை வழியோர கிராம மக்கள் நீர்வழிப்பாதை அருகே பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து தண்ணீரில் மலர் துாவி வணங்கி வர-வேற்றனர். இந்த தண்ணீர் திறப்பால், 23 இடங்களில் கட்டப்-பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக வட்ட-மலை ஓடையின் இரு கரைகளிலும், 46.3 கி.மீ., துாரம் வரை, 58 வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணைக்கு நீர் வருவதை அறிந்த செட்டிபாளையம், காளிபா-ளையம் உள்ளிட்ட

கிராம மக்கள் பொங்கல் வைத்து தண்ணிரை வழிபட்டனர். அணையில் நீர் நுழைவு பகுதியான செட்டிபாளயம் மற்றும் காங்-கயம்பாளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், விவசாயி-களும் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து மலர் துாவி மண்டி-யிட்டு வரவேற்றனர். தற்போது கள்ளிபாளையம் மதகில் திறக்-கப்பட்டுள்ள தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டால் மட்டுமே அணை நிரம்பும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us