/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
/
காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
ADDED : அக் 25, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரையும் தொட்டுக்கொண்டு கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால், பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

