ADDED : ஆக 09, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
பவானிசாகர்:பவானிசாகர்
அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி
மலைப்பகுதியில், நடப்பாண்டு வழக்கமான தென்மேற்கு பருவமழை
பெய்யவில்லை.
ஆனாலும் கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை
கொட்டுவதால், பில்லுார் அணை நிரம்பி, உபரி நீர் பவானி ஆற்றில்
வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்வரத்து, 1,738
கன அடியாக நேற்று முன்தினம் இருந்த நிலையில், 5,071 கன அடியாக நேற்று
அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 58.38 அடி, நீர்
இருப்பு, 6.7 டி.எம்.சி.,யாக இருந்தது.
