/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டம் பேஸ் - 2 குறித்து விவசாயிகளிடம் பேசுவோம்: அமைச்சர்
/
அத்திக்கடவு திட்டம் பேஸ் - 2 குறித்து விவசாயிகளிடம் பேசுவோம்: அமைச்சர்
அத்திக்கடவு திட்டம் பேஸ் - 2 குறித்து விவசாயிகளிடம் பேசுவோம்: அமைச்சர்
அத்திக்கடவு திட்டம் பேஸ் - 2 குறித்து விவசாயிகளிடம் பேசுவோம்: அமைச்சர்
ADDED : செப் 05, 2025 07:20 AM
ஈரோடு: ''அத்திக்கடவு திட்டம் பேஸ் -2 குறித்து விவசாயிகளிடம் பேசுவோம்,'' என்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
ஈரோடு, சோலார் பஸ் ஸ்டாண்ட், 2 மாத காலத்துக்குள் திறக்கும் வகையில் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கனிராவுத்தர் குளம் பஸ் ஸ்டாண்ட் நிலம் எடுப்பதிலும் சில சிக்கல் இருந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. சிப்காட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, தொழிற்சாலை கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு அல்ல. நிலத்தடி நீரால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதித்துள்ளன. அதை ஒழுங்குபடுத்தவே அமைகிறது. அப்பணி முடிந்தால், நிலத்தடி நீர் சுத்தமாகும். தோனிமடுவு திட்டம் பற்றி பேசியுள்ளோம். சேலம் மாவட்டமும் இத்திட்டத்தில் உள்ளடங்கி வருவதால், அவர்களிடம் பேசி துவங்கப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பேஸ் - 2க்கு சில தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இருதரப்பு விவசாயிகளிடமும் பேசி முடிவு செய்ய வேண்டி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.