/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
/
கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஜன 03, 2026 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நடப்-பாண்டு ஆருத்ரா விழா கடந்த மாதம், 25ம் தேதி தொடங்கியது. அதன் பின் திருவெம்பாவை உற்சவம் துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. நேற்று மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது.
இதில் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா வந்தார். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, காமராஜர் வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்-தது. பின்னர் சாயரட்சை, கால யாக பூஜையை தொடர்ந்து, வாரு-ணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

