/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மணல் குவாரிகள் திறப்பு எப்போது? மனு கொடுத்த லாரி உரிமையாளர்கள்
/
மணல் குவாரிகள் திறப்பு எப்போது? மனு கொடுத்த லாரி உரிமையாளர்கள்
மணல் குவாரிகள் திறப்பு எப்போது? மனு கொடுத்த லாரி உரிமையாளர்கள்
மணல் குவாரிகள் திறப்பு எப்போது? மனு கொடுத்த லாரி உரிமையாளர்கள்
ADDED : மார் 11, 2025 06:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட், மணல் லாரி, டிப்பர் லாரி அன்ட் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் தலைவர் சாமிநாதன், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கி கூறியதாவது: நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை செயல்படுத்த வேண்டும். கட்டுமான பணிகள் குறிப்பாக, பாலம், பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் போன்ற அரசு ஒப்பந்தங்களுக்கும் ஆற்றுமணலையே பயன்படுத்த வேண்டும்.
மணல், எம்.சாண்ட் லாரி உரிமையாளர்கள், அதை சார்ந்த ஓட்டுனர், தொழிலாளர், கட்டுமான பணியாளர், ஒப்பந்ததாரர், பொறியாளர் என லட்சக்கணக்கானோர் பாதித்துள்ளனர். மணல் குவாரிகளை செயல்படுத்த போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஈரோடு மாவட்டத்தில் மேடை மண் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேடை மண் குவாரிக்கு பர்மிட் வழங்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். எம்.சாண்ட் அனுமதி பெற்ற, 426 குவாரிக்கு பதில், 4,000 குவாரி இயங்குகிறது. இவற்றின் விலையும் பல நுாறு மடங்கு உயர்ந்துள்ளதால், மணல் குவாரிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.