/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் படிக்கும்போதே பணியாணை
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் படிக்கும்போதே பணியாணை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் படிக்கும்போதே பணியாணை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் படிக்கும்போதே பணியாணை
ADDED : மே 05, 2025 02:32 AM
ஈரோடு: கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி, 2008ல் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு இறுதியாண்டு படிக்கும்-போதே முன்னணி மற்றும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்-களில் பணி நியமன ஆணை பெற்றுத்
தரப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை செயலா-ளரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் கூறியதாவது: தங்கள் அறக்கட்டளையில், 11 கல்வி நிறுவனங்களில், 11,355 மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். கல்வி சேவையில், 2004 முதல், 20 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம்.
இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுா-ரியில், 12 இளங்கலை மற்றும் மூன்று முதுகலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., பாடப்பிரிவு உள்ளது. முன்னோடி நிறுவனங்க-ளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லுாரி, வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லுாரி, வெங்க-டேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரிகளில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்கள், நேர்காணலில் தேர்வு பெற்று பணி நிய-மன ஆணையை மகிழ்ச்சியுடன் பெறுகின்றனர்.
நீட் மற்றும் ஜெஇஇ தேர்வில் ஒவ்வொரு வருடமும் மாண-வர்கள் தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் இதர மருத்துவ கல்லுா-ரிகள், முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பில் சேருகின்றனர். கோபி பகுதியில் சிறந்த கல்வி சேவையை வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்-றுள்ளோம். நடப்பாண்டு, 2025------26ல் புதிய பாடப்பிரிவுகளான Pharm D.MPT & M.Sc. Nursing சேர்க்கப்
பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.