/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் சுற்றுப்பகுதி நீரோட்ட ஆய்வறிக்கை 3 ஆண்டுகளாகியும் சமர்ப்பிக்காதது ஏன்?
/
சிப்காட் சுற்றுப்பகுதி நீரோட்ட ஆய்வறிக்கை 3 ஆண்டுகளாகியும் சமர்ப்பிக்காதது ஏன்?
சிப்காட் சுற்றுப்பகுதி நீரோட்ட ஆய்வறிக்கை 3 ஆண்டுகளாகியும் சமர்ப்பிக்காதது ஏன்?
சிப்காட் சுற்றுப்பகுதி நீரோட்ட ஆய்வறிக்கை 3 ஆண்டுகளாகியும் சமர்ப்பிக்காதது ஏன்?
ADDED : ஜூலை 09, 2025 01:23 AM
பெருந்துறை, பெருந்துறை சிப்காட்டில் உள்ள, மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், மாசு தடுப்பு தொடர்பான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமை வகித்தார்.
இதில் மக்கள், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் பேசியதாவது: கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் இதுவரை வழங்கவில்லை. அதிகபட்சம், 15 நாட்ளுக்குள் பதிலுரை வழங்க வேண்டும் என்று, மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடுமையான மாசு ஏற்படுத்திய சிப்காட் இரும்பு தொழிற்சாலையை, மக்களின் எதிர்ப்பை மீறி மின் இணைப்பு வழங்கி, மீண்டும் செயல்பட அனுமதித்ததை கண்டிக்கிறோம்.
சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில், 40 திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீர் மாதிரி சேகரித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது நீர் மாதிரி மாதந்தோறும் ஆய்வு செய்வதில்லை. அதன் எண்ணிக்கையும் தன்னிச்சையாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீர் மாதிரி சேகரித்த, 40 இடங்களிலும் மாதந்தோறும் நீர் மாதிரி சேகரித்து ஆய்வு செய்த அறிக்கையை வழங்க வேண்டும்.
இதற்காக, 2019ல் ஹைதராபாத் -தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (என்.ஜி.ஆர்.ஐ.,) அனுமதி வழங்கப்பட்டது. இந்நிறுவனமும் மூன்று பருவ நிலைகளில் ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு முடிந்து மூன்றாண்டுகளாகியும் இதுவரை ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆய்வறிக்கையை உடனடியாக பெற்று வெளியிட வேண்டும். இவ்வாறு பேசினர்.

