நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட, சற்று அதிகமாகவே இருந்தது.
இரவு 8:10 மணிக்கு திடீரென மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம் என மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு நீடித்த மழையானது 8:40க்கு நின்றது. வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

