/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மே 23, 2024 06:55 AM
புன்செய்புளியம்பட்டி : நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பாசனத்திற்கு நீர் திறப்பு காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு, மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று மாலை நீர் வரத்து, 1,361 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 46.35 அடியாகவும், நீர் இருப்பு, 3.6 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

