/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவன் கண் முன் மனைவி படுகொலை; ஈரோட்டில் பட்டப்பகலில் வெறிச்செயல்
/
கணவன் கண் முன் மனைவி படுகொலை; ஈரோட்டில் பட்டப்பகலில் வெறிச்செயல்
கணவன் கண் முன் மனைவி படுகொலை; ஈரோட்டில் பட்டப்பகலில் வெறிச்செயல்
கணவன் கண் முன் மனைவி படுகொலை; ஈரோட்டில் பட்டப்பகலில் வெறிச்செயல்
UPDATED : டிச 13, 2024 09:31 AM
ADDED : டிச 13, 2024 09:07 AM
ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில், சொத்து தகராறில், கணவன் கண்முன்னே மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஈரோடு, செட்டிபாளையம், பாரதிபாளையம் முதலாவது தெருவை சேர்ந்தவர் நல்லசிவம், 57. ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கண்ணம்மாள், 56; தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கண்ணம்மாளுக்கு நல்லசிவம் இரண்டாவது கணவர். நல்லசிவமும் ஏற்கனவே திருமணமானவர். கண்ணம்மாளுக்கு நாதகவுண்டன் பாளையத்தில் சொத்து உள்ளது. இது தொடர்பாக அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் தகராறு, முன்விரோதம் நீண்ட நாட்களாக உள்ளது. இது குறித்து எஸ்.பி., அலுவலகம், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பலமுறை கண்ணம்மாள் புகாரளித்துள்ளார். சொத்து தகராறு, அடிதடி வழக்குகளும் தாலுகா போலீசில் நிலுவையில் உள்ளது. சொத்து பிரச்னை தொடர்பாக, 2022 முதல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கண்ணம்மாளின் சகோதரர் அர்ஜூனனின் மைத்துனர் சிவக்குமார், நல்லசிவம் வீட்டுக்கு நேற்று மதியம், 3:45 மணிக்கு ஹெல்மெட் அணிந்து வந்தார். அப்போது சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சிவக்குமார் சரமாரியாக கண்ணம்மாளை வெட்டியுள்ளார். இதில் மார்பு, கழுத்து, முகத்தில் வெட்டு விழுந்ததில் அதே இடத்தில் பலியானார். நல்லசிவத்துக்கும் இடது கை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. இதை தொடர்ந்து சிவக்குமார் தப்பி சென்று விட்டார். தாலுகா போலீசார் கண்ணம்மாள் உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர். தலைமறைவான சிவக்குமாரை, போலீசார் தேடி வருகின்றனர்.

