/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்
/
காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்
ADDED : ஜூன் 16, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை அருகே பாலமலை அடிவார பகுதியில், நெருஞ்சிப்பேட்டை, கொடம்பாக்காட்டில், விவசாயி வரதராஜ் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கரும்பு பயிரிட்-டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்குள் புகுந்த காட்-டுப்பன்றிகள், முக்கால் ஏக்கர் பரப்பிலான பயிரை சேதம் செய்-துள்ளது. வரதராஜ் தோட்டத்துக்கு நேற்று காலை சென்ற போது சேதமான கரும்பு தோட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குத்தகைக்கு விவசாயம் செய்யும் தனக்கு யார் நிவா-ரணம் வழங்குவார்கள்? இனி எப்படி குத்தகை கட்டுவது என வேதனை தெரிவித்தார்.