/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியில் பஸ்சில் சிக்கி பெண் பரிதாப பலி
/
சத்தியில் பஸ்சில் சிக்கி பெண் பரிதாப பலி
ADDED : நவ 15, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியில் பஸ்சில் சிக்கி
பெண் பரிதாப பலி
சத்தியமங்கலம், நவ. 15-
புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையத்தை சேர்ந்தவர் சாவித்திரி, 60; சத்தி மார்க்கெட்டில் பூ வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நேற்று காலை, ௯:௦௦ மணியளவில் வந்தார். அதேசமயம் தாளவாடியிலிருந்து ஈரோடு செல்லும் புறநகர பஸ், சத்தி பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது.
எதிர்பாராதவிதமாக சாவித்திரி மீது மோதியது. இதில் சாலையில் விழுந்தவர் மீது, முன்சக்கரம் ஏறி இறங்கியது. அப்பகுதியினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.