/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புல்லுக்கு வைத்த தீ கரும்புக்கு தாவியது அணைக்க முயன்ற பெண் பலியானார்

ADDED : ஜூலை 06, 2025 01:32 AM
அந்தியூர், அந்தியூர் அருகே புதுராசன்குளத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 65; நேற்று மாலை வீட்டருகே காலி இடத்தில் புற்கள் வளர்ந்திருந்ததால் தீ வைத்தார்.
எதிர்பாராத விதமாக அருகிலுள்ள கரும்பு காட்டுக்கு தீ பரவி எரிந்தது. இதனால் தீயை அணைக்கும் முயற்சியில் பாப்பாத்தி ஈடுபட்டிருந்தபோது, அவரது சேலையில் தீப்பிடித்தது.
பலத்த தீக்காயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கரும்பு காட்டில் எரிந்த தீயை, அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அணைத்தனர்.