ADDED : நவ 09, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த தொழிலாளி அர்ஜூனன் மனைவி
ஆர்த்தி, 25; தம்பதிக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு சமையல்
செய்ய மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற
வைத்துளார்.
அப்போது
சிந்தியிருந்த மண்ணெண்ணெயில் தீப்பொறி பட்டு தீப்பிடித்ததில்,
ஆர்த்தியின் உடையில் பற்றி எரிந்தது. 30 சதவீத தீக்காயங்களுடன்
மீட்கப்பட்ட ஆர்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
