/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
ADDED : ஏப் 16, 2025 08:48 PM

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அருகே, குடிநீர் கேட்டு பெண்கள் மறியல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், தொட்டம்பாளையம் பகுதி மக்களுக்கு, பவானிசாகர் அணையில் இருந்து, கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை, பவானிசாகர் -சத்தியமங்கலம் சாலையில், தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பஸ் ஸ்டாப் அருகில், காலிக் குடங்களுடன் மறியல் செய்தனர்.
பவானிசாகர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.