ADDED : ஜூன் 17, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பர்கூர்மலையில் தாமரைக்கரையை அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் முருகேசன், 41, கூலி தொழிலாளி. இவர் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. பர்கூர் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், வீட்டருகே, ௪ அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிய வந்தது. செடிகளை வேருடன் பறித்த போலீசார், முருகேசனை கைது செய்தனர்.