/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்க் ஊழியரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
/
பங்க் ஊழியரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
ADDED : ஜன 21, 2025 06:44 AM
டி.என்.பாளையம், ஜன.21--டி.என் பாளையம் அடுத்த கே.என்.பாளையம், கிழக்கு வீதியை சேர்ந்தவர் பெரியசாமி 45; ஹோட்டல் தொழிலாளி. கே.என்.பாளையம் சந்தைக்கடை பகு-தியில் மதுபோதையில் துாங்கியவரிடம்,
டி.என்.பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழிய-ரான லோகநாதன், 31, அவரது பாக்கெட்டில் இருந்து, 500 ரூபாயை திருடி சென்றாராம். லோகநாதன் வீட்டுக்கு சென்ற பெரி-யசாமி பணத்தை
தருமாறு கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநா-தனை குத்தியுள்ளார். அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைக்கேட்டு தப்ப முயன்றவரை அப்பகுதியினர் பிடித்து, பங்களாப்புதுார் போலீசில்
ஒப்படைத்தனர். வழக்குப்ப-திந்து பெரிய சாமியை கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

