ADDED : ஜூலை 12, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள மாக்கல்லுாரை சேர்ந்த தொழிலாளி கவிதா, 32; வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
எனது கணவர் ராஜகோபால், மது குடித்துவிட்டு அடிக்கிறார். அம்மா வீட்டில் பணம், நகை வாங்கி வா எனக்கூறி துன்புறுத்துகிறார். கடந்த, 8ம் தேதி, என்னையும், இரு குழந்தைகளையும் வீட்டுக்குள் பூட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரித்த வெள்ளித் திருப்பூர் போலீசார், ராஜகோபாலை கைது செய்து, பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
