ADDED : நவ 03, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்; வெள்ளகோவில் அருகேயுள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 58; காங்கேயம் கடைவீதி சங்கத்தில் சுமை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு சிக்கன் சில்லி வாங்க கடைவீதியில் நடந்து சென்றார். காடையூரான்வலசு பிரிவு அருகே, கரூரில் இருந்து செந்தில்குமார், 37, ஓட்டி வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
