ADDED : ஜன 24, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சேரன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 51, தறி தொழி-லாளி. வேலை முடிந்து விஜயமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

