/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாகும் முன் கடித்த பாம்புக்கு சாவை கொடுத்த தொழிலாளி
/
சாகும் முன் கடித்த பாம்புக்கு சாவை கொடுத்த தொழிலாளி
சாகும் முன் கடித்த பாம்புக்கு சாவை கொடுத்த தொழிலாளி
சாகும் முன் கடித்த பாம்புக்கு சாவை கொடுத்த தொழிலாளி
ADDED : ஜூன் 01, 2025 01:23 AM
பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் குமாரசாமி, 65; மனைவியுடன் பவானிசாகர் அருகே அய்யன்சாலை பகுதியில் ஒரு தோட்டத்தில் தங்கி தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று காலை பாக்கு மரங்களில் மட்டை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கண்ணாடி விரியன் விஷப்பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்து விட்டார். நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் தோட்டத்துக்கு சென்று மனைவி சென்று பார்த்தபோது மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ௧௦௮ அவசரகால ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார்.
ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர் சோதனையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தன்னை கடித்த பாம்பை, குமாரசாமி அரிவாளால் வெட்டி கொன்றதும், பவானிசாகர் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.