/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை மிரட்டி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை மிரட்டி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை மிரட்டி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை மிரட்டி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 23, 2025 02:12 AM
ஈரோடு, மொடக்குறிச்சி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தறி பட்டறை தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் லக்காபுரம் புதுவலசை சேர்ந்தவர் சாமிநாதன், 56; இவருக்கு, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, 2019 டிச.,23ல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் பலமுறை மிரட்டி கொடூரத்தை தொடர்ந்ததில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர், 2020 ஜூன், 24ல் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதேசமயம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. போக்சோவில் இரு பிரிவு, கொலை மிரட் டல் விடுத்தது என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து சாமிநாதனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். சாமிநாதனுக்கு மூன்று பிரிவுகளுக்கும் சேர்த்து, 41 ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் அபராதம் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டால் அதிகபட்ச தண்டனையான, 20.6 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். அரசு சார்பில் சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.