/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோர்ட் உத்தரவிட்டும் 12 ஆண்டாக இழுத்தடிப்புபவானிசாகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 07, 2025 01:35 AM
பவானிசாகர், பவானிசாகரில் கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான, சாய சலவை அச்சு அலகு செயல்பட்டு வந்தது. இங்கு, 48 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இழப்பு ஏற்பட்டதால், 2002 டிச.,ல் முன்னறிவிப்பின்றி தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிலாளர்களுக்கு மாற்று பணி, பிடித்தம் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் சார்பில்,சேலம் லேபர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் தொழிலாளர்களுக்கு சம்பளம், பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் இழப்பீடு வழங்க, கதர்கிராம தொழில் வாரியத்துக்கு, ௨௦௧௩ல் உத்தரவிடப்பட்டது. உத்தரவிட்டு, 12 ஆண்டுகளாகியும் நிலுவை தொகை வழங்கவில்லை. இந்நிலையில் நிலுவை தொகையை, 9 சதவீத வட்டியுடன் வழங்கக்கோரி, பவானிசாகரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் துரைசாமி தலைமையில், அனைத்து வகை ஐக்கிய தொழிற்சங்க தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.