/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டல் மண் எடுக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
/
வண்டல் மண் எடுக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட நீர் வளத்துறை, ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்-பாட்டில் உள்ள அணைகள், குளம், குட்டைகளில் வண்டல் மண்ணை, விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்படி நடப்பாண்டு, 228 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மண்ணை இல-வசமாக எடுத்து செல்ல, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மண் எடுக்க, அந்தந்த பகுதி தாசில்தார்களே, இணைய வழியில் அனு-மதி வழங்குவர்.மண் தேவைப்படும் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர், தாங்கள் வசிக்கும் வட்டத்துக்கு அருகே, அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்-களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பங்கள், வருவாய் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ், நில ஆவணங்கள் சரி பார்த்து, மண் அல்லது வண்டல் மண் எடுக்க, அனுமதி வழங்கப்படும். விவ-சாய பயன்பாட்டுக்கு, நஞ்சை நிலத்துக்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 75 கனமீட்டர் அல்லது ஒரு ெஹக்டே-ருக்கு, 185 கன மீட்டர் அளவில் வழங்கப்படும்.இதேபோல் புன்செய் நிலத்துக்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை, 1 ஏக்-கருக்கு 90 கனமீட்டர் அல்லது ஒரு ெஹக்டேருக்கு, 222 கன-மீட்டர் அளவில் வழங்கப்படும்.மண் பாண்டம் தயாரிக்க, 60 கன மீட்டர் அளவிலும், சொந்த வீட்டு உபயோகத்துக்கு, 30 கன மீட்டர் அளவில் இலவசமாக அனுமதி வழங்கப்படும். tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.