/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் பேரூராட்சி இடங்களில் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
பவானிசாகர் பேரூராட்சி இடங்களில் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
பவானிசாகர் பேரூராட்சி இடங்களில் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
பவானிசாகர் பேரூராட்சி இடங்களில் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 16, 2024 12:50 AM
பவானிசாகர் பேரூராட்சி இடங்களில்
கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
புன்செய் புளியம்பட்டி, அக். 16-
பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பேரூராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில், இரு கடைகள் ஆரம்பிக்க தகர சீட் போடப்பட்டது. இதுகுறித்த விபரத்தை பேரூராட்சி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ரகசியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு திரண்டனர். நாளை பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் கூறியதால் மக்கள் சென்றனர்.
இதன்படி பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து கட்சியினர், வாடகை கார், டெம்போ உரிமையாளர் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மக்கள் பங்கேற்றனர். தலைவர் மோகன், செயல் அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களை முறையான ஏலம் விட்டு, கடைகள் அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். கார், டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்களை நிறுத்த, ஏற்கனவே இருந்தது போல் ஸ்டாண்ட் அமைக்க மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்படும். அதன் அருகே தற்போது அமைக்கப்பட்ட இரண்டு கடைகளும் முறைப்படி வரி செலுத்தி வருவதால் அகற்ற முடியாது; அதுவும் அப்படியே தொடரும். மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அவரவர் விரும்பும் இடங்களில் கடை வேண்டி விண்ணப்பித்தால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என தலைவர், செயல் அலுவலர் உறுதி அளித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதை ஏற்றதால், சுமூகமான முறையில் கூட்டம் நிறைவடைந்தது.